Actor Govinda:திடீரென வெடித்த துப்பாக்கி; நடிகர் கோவிந்தாவுக்கு தீவிர சிகிச்சை!

Advertisements

பாலிவுட் நடிகரும், சிவசேனா கட்சி நிர்வாகியுமான கோவிந்தா காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

பாலிவுட் நடிகர் கோவிந்தா மும்பையில் உள்ள கிரிட்டி கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் தவறுதலாகத் துப்பாக்கியால் சுட்டதில் அவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்தம் மளமளவெனக் கொட்டியது. இதையடுத்து அவரை மீட்ட உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.

இச்சம்பவம் இன்று அதிகாலை 4.45 மணிக்கு நடந்துள்ளது. கோவிந்தா தன்னிடம் உள்ள துப்பாக்கியைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாரா விதமாகத் துப்பாக்கி வெடித்தில் அவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மும்பை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் கோவிந்தா விரைவில் உடல்நலம் பெற்று வீடு திரும்ப வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். பிரபலங்களும் அவர் நலம்பெற வேண்டி வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *