
இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஒத்த ஓட்டு முத்தையா.
இந்தப் படத்தில் கவுண்டமணியுடன் யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சிங்கமுத்து மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டவர்கள் நடித்திருகின்றனர்.
இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கமலா திரையரங்கத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் பாக்யராஜ், பி. வாசு, தயாரிப்பாளர் கே. ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கவுண்டமணி பேசும்போது கூறியது,
இந்த விழாவிற்கும் வந்திருக்கும் ரசிகர்கள், வராத ரசிகர்கள், வீட்டிலேயே இருக்கும் ரசிகர்கள், வெளியூரில் இருக்கும் ரசிகர்கள், வெளிநாட்டில் இருக்கும் ரசிகர்கள், ஹாலிவுட்டில் இருக்கும் ரசிகர்கள் என அனைத்து ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
கவுண்டமணியின் இந்தப் பேச்சு அரங்கத்தில் சிரிப்பலையை எழுப்பியது.
