
‘திரிஷ்யம்’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும், வில்லனாகவும் நடித்துள்ள கூட்டிக்கல் ஜெயச்சந்திரன் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமிக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சம்பவத்தன்று சிறுமி இயற்கை உபாதைகளுக்காக வெளியில் சென்ற நிலையில், நீண்ட நேரம் கழித்தே மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சிறுமியின் ஆடைகள் சற்று அலங்கோலமாகவும், உடல் முழுவதும் புழுதி படிந்த நிலையிலும் வந்ததை உறவினர்கள் கவனித்துள்ளனர்.
இவரது சொந்த ஊர் பாலக்காடு என்றாலும், சில காலம் பொள்ளாச்சியில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கோழிக்கோட்டு காவல் நிலையத்தில் இவர்மீது பாலியல் வன்கொடுமை புகார் ஒன்றை அளித்துள்ளார் 4 வயது குழந்தையின் தாய் ஒருவர்.
இதுகுறித்து போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். குழந்தையின் பெற்றோருடன் ஏற்ப்பட்ட தகராறை சாதகமாகப் பயன்படுத்தி ஜெயச்சந்திரன் நான்கு வயது குழந்தையைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகச் சிறுமியின் தாய் தன்னுடைய புகார் மனுவில் கூறியுள்ளார்.
மேலும் நான்கு வைத்தே ஆகும் குழந்தையைப் பாலியல் பலாத்காரம் செய்த நடிகர் கூட்டுக்கல் ஜெயச்சந்திரனை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர் ஜெயச்சந்திரனுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் எனத் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
