Lok Sabha Election 2024: முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்!

Advertisements

இன்று காலை 7 மணிக்குத் தமிழகம் மற்றும் 21 மாநிலங்களில் வாக்குப் பதிவு துவங்கும் நிலையில், 6.45 மணிக்கே வந்து காத்திருந்து முதல் ஆளாக வாக்களித்துள்ளார் நடிகர் அஜித்.

தமிழகம் முத்துவதும் இன்று காலை 7 மணிமுதல், 21 மாநிலங்களிலும் 102 தொகுதியிலும் மக்களவை தொகுதியில் முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கியது.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்,  வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே திருவான்மியூர் பாரதிதாசன் தெருவில் உள்ள மேல்நிலைப் பள்ளியில், வாக்களிப்பதற்காகச் சரியாக 6.45 மணிக்கே வருகை தந்தார்.

வாக்குப் பதிவு துவங்கும் வரை காத்திருந்த அவர், சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியதும், தமிழ்நாட்டில் முதல் ஆளாகத் தன்னுடைய ஜனநாயக உரிமைக்கான வாக்கினை அளித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

அஜித் வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்துள்ளது பலரையும் பிரமிக்க வைத்திருந்தாலும், அஜித் வாக்களிக்க வந்திருக்கும் தகவல் தெரிந்தால் அங்கு ரசிகர்கள் கூடி விடுவார்கள் என்பதால் இதைத் தவிர்க்கவே, முதல் ஆளாக வந்து வாக்களித்துவிட்டு சென்றுள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அஜித் வாக்களிக்க வந்தபோது , ரசிகர்கள் அங்குக் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ரசிகர் ஒருவர் அத்து மீறிச் செல்பி எடுக்க முயன்ற நிலையில் அவரின் செல் போனை அஜித் பிடுங்கிய விஷயமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனினும் அந்த ரசிகரிடம் பின்னர் செல்போனை திரும்பக் கொடுத்துவிட்டு அஜித் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *