Accident: தனியார் பேருந்து மோதி இளைஞர் பலி!

Advertisements

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் தனியார் பேருந்தில் சிக்கி உயிரிழந்தார்.

கோயம்பேடு போக்குவரத்து புலனாய் போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் உடலைக் கைப்பற்றி அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பின்னர் கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு  போலீசார் முதற்கட்ட விசாரணையில்:திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி, Led சிட்டி அம்மாள் 54 தம்பதியினர்க்குஇரண்டு மகளும் இரண்டு மகனும் உள்ளனர், முதல் மகனான கலையரசன் 26, இவர் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருவதாகவும்,

இன்று காலை நண்பரின் நிகழ்ச்சிக்குக் கலையரசன்  அவரது இருசக்கர வாகனத்தில்  சென்று கொண்டிருந்தபொழுது திடீரென எதிர்பாராதபோது  தனியார் பேருந்தில் சிக்கி உயிரிழந்தார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் இவருக்குத் திருமணம் ஆகவில்லை என்றும் அமலா,  லல்லி, ஆகிய  இரு அக்காக்களுக்கும் திருமணம் ஆகி உள்ளதாகவும், இவரது தம்பி   பூவரசன் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் குடும்ப பாரத்தை சுமக்கும் பிள்ளை உயிரிழந்த சம்பவம் தெரிந்ததும் குடும்பத்தினர் கே எம்சி அரசு மருத்துவமனையில்  பிரேத பரிசோதனைக்கு உடலை வாங்கிக் கொண்டு திருநின்றவூர் கொண்டு போவதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் தனியார் பேருந்து ஓட்டுனர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *