Pablo Picasso: ஒரு ஓவியம் ஆயிரம் கோடியா?

ஒரு ஓவியம் ஆயிரம் கோடியா?  ஏலத்திற்கு வரும் பிக்காசோ படைப்புகள்!

உலகின் தலைசிறந்த ஓவியரான பிகாசோவின் ஒரு ஓவியம் 1000 கோடி ரூபாய் வரை ஏலம் போகும் என கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில்  நவம்பர் 8-ஆம் தேதி தலைசிறந்த ஓவியங்களை ஏலம் விடும் நிகழ்ச்சி ஒன்று தொடங்கவுள்ளது. இங்கு உலகப்புகழ் பெற்ற ஓவியர்களின் பல்வேறு ஓவியங்கள் ஏலம் விடப்பட உள்ளது. இந்த ஏல நிகழ்ச்சியில் உலகப்புகழ் பெற்ற ஓவியர் பாப்லோ பிக்காசோவின் தலைசிறந்த ஓவியம் ஒன்றும் ஏலம் விடப்பட உள்ளது. இந்த ஓவியம் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரபல ஆப்பிரிக்க, அமெரிக்க ஓவியரான ஜீன் மைக்கேல் பாஸ்குயட் 1982-ல் வரைந்த 8 அடி உயரமுள்ள ஓவியமும் ஏலம் விடப்படவுள்ளது. இந்த ஓவியம் 494 கோடி ரூபாய்  வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *