
வங்கக் கடலில் அடுத்த ஏழு நாட்களுக்குக் காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாக வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று காலை எட்டரை மணி நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலிலும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலிலும் ஒரு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ளது.
வங்கக் கடலில் அடுத்த ஏழு நாட்களுக்குக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.
அதிக அளவாகத் திருநெல்வேலி மாவட்டம் ஊத்தில் 9 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாலுமுக்கு, காக்காச்சி, மாஞ்சோலை ஆகிய இடங்களில் 7 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.





