
தற்போதைய மதிமுக ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் நிலையில், அவர் தற்போது கோவை தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய மதிமுக ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படும் நிலையில், அவர் தற்போது கோவை தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்.
பரப்புரையில் கணேசமூர்த்தி:
கடந்த தேர்தலைப் போலவே இம்முறை திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இம்முறை திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அங்கு மதிமுகவின் முதன்மை செயலாளர் துரை வையாபுரி போட்டியிடுகிறார். இம்முறை தனிச்சின்னத்தில் அங்கு மதிமுக போட்டியிடுகிறது. திமுகவின் கோட்டையாகக் கருத்தப்படும் திருச்சியில் வெற்றி பெற்ற ஆக வேண்டும் என மதிமுகவினர் அங்குத் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, கடந்தாண்டு மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட ஈரோடு தொகுதி இம்முறை திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்குத் திமுக வேட்பாளரை ஆதரித்து, மதிமுக மக்களவை உறுப்பினர் கணேசமூரத்தி பரப்புரை மேற்கொண்டு வந்தார்.
மன உளச்சலில் இருந்தாரா…?
இந்நிலையில், வீட்டில் கணேசமூர்த்தி திடீரென மயக்கம் அடைந்த நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குத் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதன் பின்னர் மருத்துவர்கள் தீவிரமாகச் சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் உடல் நலம் கருதி மேல் சிகிச்சைக்காகக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். இதற்கு முன்னதாகப் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடும் மன உளச்சலில் கணேசமூர்த்தி இருந்து வந்தாகவும், அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து போலீசார் குடும்பத்தினர் மத்தியில் எம்பி கணேசமூர்த்தி தற்கொலை முயற்சிக்கான காரணம்குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் எம்பி கணேசமூர்த்தி உடல் நலம் குறித்து விசாரிக்க அதிமுக, திமுக, பாஜக என அனைத்து கட்சியைச் சேர்ந்த தற்போதைய மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவமனையில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
76 வயதான கணேசமூர்த்தி 1989ஆம் ஆண்டு மொடக்குறிச்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வைகோ திமுகவிலிருந்து வெளியேறி மதிமுகவை தொடங்கிய நிலையில், கணேசமூர்த்தியும் அக்கட்சியில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


