மிக்ஜாம் புயல் நிவாரண நிதியை மத்திய அரசு விரைந்து அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அளிக்கும் நிதியை தமிழ்நாடு அரசு சிந்தாமல் ,சிதறாமல் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேண்டு கோள் விடுத்துள்ளார்.
சென்னை வேலம்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி திருவேற்காட்டில் நடைப்பெற்றது.இதில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கலந்துகொண்டு 2000 பேருக்கு அரிசி மற்றும் சோப்பு,பிரஸ்.பேஸ்ட் உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தற்போது உள்ள தொழிற்நுட்ப வளர்ச்சியில் புயல் வருவது ஒரு மாதாத்திற்கு முன்பே தெரிந்து விடுகிறது. தமிழ்நாடு அரசு முன்கூட்டியே கூடுதல் கவனத்தோடு செயல்பட்டிருந்தால் தற்போது ஏற்பட்டிருக்கும் பாதிப்பை குறைத்திருக்கலாம் என்ற அவர் தமிழ்நாடு அரசு 5000 கோடி மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளது. அதில் ஐந்தில் ஒரு பங்கு நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கி இருந்தாலும் மீதி நிதியை விரைந்து வழங்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

மேலும் பேசிய அவர் மத்திய அரசு வழங்க கூடிய நிதியை சிந்தாமல் சிதராமல் எந்தவொரு முறைகேடும் இல்லாமல் மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். கடந்த ஒன்பதரை ஆண்டு கால பாஜக ஆட்சியில் இது போன்ற பெரும் அசம்பாவிதங்கள் எங்கும் நடைபெறவில்லை.
ஆனால் தேர்தல் வரவிருக்கும் நிலையில் பாஜக அரசின் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் இந்த சதி திட்டம் நடைப்பெற்றுள்ளது. இதன் பின்பு உள்நாட்டு சக்திகள் இருக்கின்றதா வெளிநாட்டு சக்திகள் இருக்கின்றதா என்பது விரைவில் தெரிய வரும் என தெரிவித்தார்.

