2023 Cricket World Cup: களைகட்டும் உலகக் கோப்பை!

2023 Cricket World Cup

உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் இம்முறை இந்தியாவில் நடக்க உள்ளது. போட்டி தொடங்க சில தினக்களே உள்ளதால்,  விளையாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.

இப்போடியானது அக்டோபர் மாதம் 5-ஆம் தேதியிலிருந்து நவம்பர் 12-ஆம் தேதிவரை லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன் பிறகு நவம்பர் 15, 16 ஆகிய தேதிகளில்  அரையிறுதி போட்டிகளும் நடைபெறும்.

இறுதி    போட்டியானது  நவம்பர் 19-ஆம் தேதி  அஹமதாபாதில் உள்ள மோடி மைதானத்தில் நடைபெற உள்ளதாகத்   தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து இப்போதிலிருந்தே விளையாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர்.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இங்கிலாந்து, நெதர்லான்ஸ், சவுத் ஆப்பிரிக்கா, இலங்கை, மற்றும் ஆஸ்திரேலியா முதலான நாடுகள் பங்கேற்கும் இப்போட்டி மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் அணி வீரர்கள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளது க்குற்ப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *