2023 Asian Games: இந்தியாவுக்கு முதல் தங்கம்!

Advertisements

9-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா பதக்க பட்டியலில்  தற்போது 6-வது இடத்தில் உள்ளது.

ஹாங்சோவ்: 9-வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நேற்று முன்தினம் கோலாகலமாகத் தொடங்கியது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 2-வது நாளான நேற்று இந்தியா 5 பதக்கங்களைத் தட்டி சென்றது. இந்தியா இன்று ஒரு தங்கம் மற்றும் வெண்கலம் பெற்று  ஆசிய விளையாட்டு போட்டிகளின் பதக்க பட்டியலில்  தற்போது 6-வது இடத்தில் உள்ளது.

இந்தியாவுக்கு முதலாவது பதக்கத்தைத் துப்பாக்கி சுடுதல் வீரர் ‘சுட்டு’ தந்தனர். பெண்கள் அணிக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ரமிதா, மெகுலி கோஷ், ஆஷி சோக்சே ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 1,886 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பெற்று வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது. படகு போட்டியில் 3 பதக்கம் பெற்றது. இதுவரை 9 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *