ஹரியானாவில் கள்ளச்சாராயம் அருந்திய 19 பேர் உயிரிழப்பு.. 7 பேரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை!
ஹரியானா மாநிலம் அம்பாலா மாவட்டத்தில் உள்ள யமுனா நகரில் கள்ளச்சாராயம் அருந்திய 19 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோதமாக விஷ சாராயம் விற்பனை செய்த 7 பேரைக் கைது செய்துள்ளது காவல்துறை. இதில் ஜனநாயக ஜனதா கட்சியின் மகனும் அடங்குவார்.
இச் சம்பவம் அம்பாலா மாவட்டத்தில் உள்ள மண்டேரி, பன் ஜெட்டோ க மஜ்ரா, பூஜ்கார் மற்றும் சரன் யமுனா நகர் மற்றும் அண்மையில் உள்ள கிராமங்களில் மது விற்பனை நடைபெற்று அக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மது அருந்தியவர்களில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரித்து வரும் சூழலில் அம்பாலா போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.