Shahdol: மின்சாரம் தாக்கி 12 வயது புலி பலி!

Advertisements

மத்திய பிரதேச மாநிலம் ஷாடோல் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி 12 வயது புலி இறந்துபோனது.

ஷாடோல்: பாந்தவ்கர் தேசிய பூங்காவை ஒட்டியுள்ள ஜெய்த்பூர் வனப்பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் காட்டுப்பன்றிகளை பிடிப்பதற்காகக் கிராமவாசிகள் மின்சார கம்பிகளைப் பொருத்தியிருந்தனர்.

இந்நிலையில் 12 வயதுடைய புலி ஒன்று அப்பகுதியை நெருங்கி மின்சார கம்பிகளைக் கடந்தபோது, மின்சாரம் தாக்கிப் பலியானது. 15 நாட்கள் கழித்து அப்பகுதியில் ரோந்து சென்ற வனத்துறையினர் புலியின் சடலத்தை மீட்டனர்.

இதையடுத்து வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கிராமவாசிகள் 11 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.கடந்த ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி மத்திய பிரதேசத்தில் புலிகளின் எண்ணிக்கை 785 ஆக உள்ளது. அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 563 புலிகளும், உத்தரகாண்டில் 560 புலிகளும் உள்ளன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *