ட்ரான்ஸ்பரென்ட் சேலை.. கோலிவுட் நாயகிகளுக்குப் போட்டி!

Advertisements

Actress Shaalin Zoya : பிரபல நடிகை ஷாலினி ஜோயா இப்பொது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவர் மனதையும் கவர்ந்து வருகின்றார் என்றே கூறலாம்.

கடந்த 1997 ஆம் ஆண்டு கேரளா மல்லபுரத்தில் பிறந்தவர் தான் நடிகை ஷாலின் சோயா, குழந்தையின் நட்சத்திரமாக மலையாள திரை உலகில் அறிமுகமான இவர் தற்பொழுது நல்ல பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழில் வெளியான “ராஜா மந்திரி” என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான இவர், அண்மையில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான “கண்ணகி” திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் ஷாலின் சோயா தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று அசத்தி வருகிறார். அவருடைய கொஞ்சும் தமிழ், பலராலும் விரும்பப்பட்டு வருகிறது.

மலையாளம், தமிழ் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ள ஷாலின் சோயா, அவ்வப்போது சில குறும்படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *