செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைப்பு!

சென்னை: தமிழகம் முழுவதும் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் வருகிற 15ம் தேதி தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்தத் தேர்வுகள் தற்போது தள்ளி வைக்கப்பட்டு, ஜூன் 6ம் தேதி தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற ஜூன் 4ம் தேதி எண்ணப்பட இருக்கின்றன. தமிழகத்தின் 39 தொகுதிகளில் வாக்குகள் பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெரும்பாலும் பொறியியல் கல்லூரிகளில்தான் வைக்கப்பட்டுள்ளன.

இந்த அறைகளுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தப் பாதுகாக்கப்பட்ட இடங்களில் மாணவர்களோ அல்லது வெளி ஆட்களோ அனுமதிக்கப்படுவது கிடையாது. இந்த நிலையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது என்பது கடினமாக இருக்கும் என்பதால் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. எனவே வருகிற 15ம் தேதி பொறியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் இல்லை என்றும் அது ஜூன் 6ம் தேதி தொடங்கி நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *