இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த விவாகரத்தில் பரங்கிமலை சதீஷை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறை தரப்பில் போதிய விளக்கம் தராத நிலையில், சத்யாவை கொடூரமாக கொன்ற சதீஷ் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.சென்னை கிண்டியை அடுத்த ஆலந்தூர் காவலர் குடியிருப்பு பகுதியில் தனது தாய் தந்தையுடன் வசித்து வந்தவர் சத்ய பிரியா,20. இவரது தந்தை ஆக்டிங் டிரைவாக பணியாற்றி வந்தவர். தாய், தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார்.
மாணவி சத்யா உயிரிழந்த சோகத்தால் மாரடைப்பு ஏற்பட்டு சைதாப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாணவியின் தந்தை மாணிக்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.மாணவி சத்யா தி.நகரில் உள்ள கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கல்லூரிக்கு செல்வதற்காக கடந்த மாதம் 13ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு தனது பெண் தோழிகளுடன் வந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் பேசிக் கொண்டிருந்தபோதே சத்யாவின் கையைப் பிடித்து, தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த ரயில் முன் தள்ளி விட்டு கொலை செய்தார். இதில் ரயிலில் சிக்கி சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சத்யா தனது காதலை ஏற்றுக் கொள்ளாததால் சதிஷ் அவரை ரயில் முன் தள்ளி கொலை செய்தார் என தெரியவந்தது. ரயில்வே காவல்துறையில் மூன்று தனிப்படைகளும் பரங்கிமலை காவல்துறையின் நான்கு தனிப்படைகளும் தேடி வந்த நிலையில் துரைப்பாக்கம் அருகே தலைமறைவாக இருந்த சதிஷ் கைது செய்யப்பட்டார். சதீஷை 15 நாட்கள் நீதிமன்ற காவலில், புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒருதலைக் காதலால் மாணவி சத்யா, ரயிலில் தள்ளி கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி அப்போதய டிஜிபி சைலேந்திரபாபு.
சத்திய பிரியாவை, சதிஷ் ஒருதலையாக காதலித்து வந்தார். தொடர்ந்து மாணவியின் பின்னால் சுற்றி தொந்தரவு செய்து வந்தார். ஆனாலும் அவரது காதலை மாணவி சத்திய பிரியா ஏற்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சதிஷ் சத்ய பிரியாவை ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்ததாக சிபிசிஐடி விசாரணையில் தெரிவித்தார். பலமுறை பேச முயற்சித்தும் சத்யா பேசாமல் தன் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்து பத்து நாட்கள் பின் தொடர்ந்து சென்று கொலை செய்ய திட்டமிட்டதாக தெரிவித்துள்ளார். கொலை நடந்த நாட்களுக்கு முன்னதாக மூன்று நாட்கள் பரங்கிமலை ரயில் நிலையத்தில் கொலை செய்வதற்கு பின் தொடர்ந்து திட்டம் தீட்டியதாகவும் சத்யாவை கொலை செய்ய திட்டம் தீட்டினாலும் காதலித்த பெண் என்ற காரணத்தினால் கொலை செய்ய மனம் வராமல் தினமும் திரும்பிச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
கொலை செய்த தினத்தன்று தன்னையும் அறியாமல் குழப்ப மனநிலையில் சத்யாவை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்ததாகவும், உண்மையில் கொலை செய்யும் எண்ணம் தனக்கு இல்லை என சி பி சி ஐ டி போலீசாரிடம் சதீஷ் வாக்குமூலம் அளித்துள்ளார். வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட சிபிசிஐடி போலீசார் சதீஷை நவம்பர் 10 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடக்க உத்தரவு பெற்று புழல் சிறையில் அடைத்தனர். இதனிடையே சத்யபிரியாவை கொலை செய்த சதிஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சிபிசிஐடி பரிந்துரையின் அடிப்படையில் சதீஷ் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யும்படி நவம்பர் 4ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். தன் மீது பதியபட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சதிஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், சட்டவிரோதாமாகவும், அடிப்படை உரிமையை மீறியும், அவசரகதியில் குண்டர் சட்டம் பதியபட்டுள்ளதாகவும், குண்டர் சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நகல் முறையாக பிறப்பிக்கபடவில்லை இது இயற்கை நீதிக்கு முரணாணது என தெரிவித்துள்ளார்.
எனவே சென்னை காவல் ஆணையரின் இயந்திரதனமான உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது ல், காவல்துறை தரப்பில் ஒரு கொடூரமான சம்பவத்தை செய்துள்ள சதீசுக்கு எந்த நிவாரணமும் வழங்க கூடாது என வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கு குறித்து தமிழக அரசு, சென்னை மாநகர காவல் ஆணையர், சிபிசிஐடி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சதீஷ் தரப்பில், கைது உத்தரவில் செப்டம்பர் 27 என தமிழிலும், அக்டோபர் 13 என ஆங்கிலத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது, முரணாக இருப்பதாக சுட்டிக்காட்டி வாதிடப்பட்டது. இதற்கு காவல்துறை தரப்பில் போதிய விளக்கம் தராத நிலையில், பரங்கிமலை சதீஷ் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.