
நடிகை சோபிதா துலிபாலாவெள்ளை நிற சேலையில்… ரசிகர்களுக்குக் கவர்ச்சி விருந்து வைக்கும் விதமாக எடுத்துக் கொண்ட போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தாவின், முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் டேட்டிங் சர்ச்சையில் சிக்கி இருக்கும், நடிகை துலிபாலா ஆந்திராவை சேர்ந்தவர். 1992-ஆம் ஆண்டு பிறந்த இவர், தன்னுடைய இளம் வயதிலேயே மும்பைக்கு சென்று தன்னுடைய படிப்பைத் தொடர்ந்தார்.
கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே மாடலிங் துறையில் அதிகம் கவனம் செலுத்த துவங்கிய சோபிதா, Femina Miss India 2013 அழகி பட்டத்தை வென்றார்.

மாடலிங் துறையில் தனக்கு கிடைத்த பிரபலத்தை வைத்துத் திரைப்பட வாய்ப்பு தேடியவருக்கு, 2016-ஆம் ஆண்டு Raman Raghav 2.0 என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து சில பாலிவுட் பட வாய்ப்பைக் கைப்பற்றிய சோபிதா, தென்னிந்திய மொழி படங்களிலும் நடிக்க முயற்சி செய்தார்.
அந்த வகையில் தெலுங்கில் கூடாச்சாரி, மலையாளத்தில் மூத்தோன், என வரிசையாகத் தரமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கத் துவங்கினார். தமிழில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில், ராஜ ராஜ சோழன்… அருண்மொழி வர்மனுக்கு ஜோடியாக வானதி கதாபாத்திரத்தில் நடித்தார்.
தற்போது இவரின் கைவசம் தமிழ் படங்கள் இல்லை என்றாலும், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் படங்களில் நடித்து வருகிறார். வெப் சீரிஸ்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

32 வயதாகும் சோபிதா துலிபாலா… ஒரு சில காதல் சர்ச்சையிலும் சிக்கியவர். பிரபல நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவை இவர் டேட்டிங் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இருவரும் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு செல்வது ஒருபுறம் இருக்க, வெளியில் செல்லும்போது எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களும் வெளியாவதை பார்க்க முடிகிறது.
இந்நிலையில் சோபிதா, ட்ரெஸ் நிறுவனம் ஒன்றை திறந்து வைத்து…. அதில் உள்ள ஆடைகளைப் பார்வையிட்டுள்ளார். இதில் சோபிதா வெள்ளை நிற சேலையில், ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்துள்ளார். இந்தப் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

