
அமெரிக்காவை ஈரான் தாக்கினால், அந்நாட்டின் மீது முழுமையான வலிமையும் செலுத்தப்படும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்தது. மேலும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு உதவினால், அவர்களின் ராணுவம் மற்றும் கடற்படைத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது., இந் நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு, அமெரிக்காவுக்கு சம்பந்தம் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல் ஏதேனும் நடத்தினால், இதுவரை கண்டிராத அமெரிக்க ஆயுதப் படைகளின் முழு வலிமையும், ஈரான் மீது செலுத்தப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இருப்பினும், இஸ்ரேல் – ஈரான் போரை மோதலை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பும் விடுத்துள்ளார். இரு நாடுகளுக்கிடையேயான மோதலில், ஈரானில் 78 பேர் பலியானதுடன், 320-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், இஸ்ரேலில் 3 பேர் பலியானதுடன், 170-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறுப்படுகிறது.



