
தமிழ்ப் பெண்கள் உலகை வெல்வதற்கு திமுக துணை நிற்கும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் உலக மகளிர் தினத்தையொட்டி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். இதில், தமிழ்ப் பெண்கள் உலகை வெல்வதற்கு திமுக துணை நிற்கும் எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, பெண்கள் தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேற வலியுறுத்தினார். உங்களது பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உடன்நிற்க திமுக அரசு இருக்கிறது என்றும் அனைவருக்கும் உலக மகளிர் தின நல்வாழ்த்துகள் என்றும் தெரிவித்தார்.



