World’s Tallest Dog: சாதனை படைத்த நாய் மரணம்!

Advertisements

கின்னஸ் சாதனை படைத்த நாய் மரணம். உயரமாக  வளர்ந்து உலக சாதனை.

கின்னஸ் சாதனை படைத்த உலகின் உயரமான நாயான ஜீயஸ்  சமிபத்தில் புற்று நோயால் 3 வயதில் உயிரிழந்தது. அதற்கு நாய் ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எலும்பில் ஏற்பட்ட புற்று நோய் காரணமாக  ஜீயஸ் உயிரிழந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வந்த ஜீயஸ் 3 அடி 4.18 இன்ச் உயரம்.இதன் மூலம் உலகிலேயே அதிக உயரம் கொண்ட நாய் என்ற கின்னஸ் சாதனையை ஜீயஸ் கடந்த 2022 மார்ச் மாதம் பெற்றது. ஜீயஸ் சர்வதேச அளவில்  புகழ் பெற்றது.  ஜீயஸ் மீது உலகமே அன்பு செலுத்தினர். இந்நிலையில் ஜீயஸ்   எலும்பு    புற்று நோய் தாக்கியது.  சிகிச்சையின்போது அதற்கு வலது காலை நீக்க வேண்டும்  என்று  மருத்துவர்கள்  தெரிவித்தனர்.

அறுவை சிகிச்சைக்குத் தேவைப்பட்ட 8 ஆயிரம் கூடுதல் செலவு ஆகும் என்பதால் அதன் உரிமையாளர்கள் பொது தளத்தில் உதவி கேட்டனர். 8 ஆயிரம் அமெரிக்க டாலர் தேவைப்பட்ட நிலையில் ஜீயஸிற்கு 12 ஆயிரம் டாலர் வரை கிடைத்துள்ளது.கடந்த 7 ஆம் தேதி அறுவை சிகிச்சை  நடந்தது. இது வெற்றிகரமாக முடிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அடுத்த 3 நாட்களில் சில பாதிப்புகள் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவத்தால் உலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *