World Saree Day: சேலை கட்டும் பெண்ணுக்கொரு ஆசை உண்டு!

செந்தமிழ் நாட்டு தமிழச்சியே சேலை கட்ட தயங்குறியே..

சேலையில் வீடு கட்டவா .. சேர்ந்து வசிக்க .. இப்பையா திரைப் படப்பாடல்கள் நமக்கு சேலையின் முக்கியத்துவத்தையும் சிறப்பையும் உணர்த்துகிறது..

என்னதான் ஃபேஷன் என்று ஆயிரக்கணக்கான ஆடைகள் வந்தாலும் சேலையைப் போல் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த ஆடை இன்று வரை இல்லை என்றே கூறலாம்..

டிஜிட்டல் உலகில் வாழ்ந்தாலும் டீசென்ட் ஆன ஆடை சேலை மட்டுமே.. இந்தியாவின் பாரம்பரிய உடை சேலையாகும். தென்னிந்தியர்களின் கலாச்சார உடை சேலை.. வயது வந்த பெண்பிள்ளைகள் முதல் வயோதிகர் வரை அணியும் சேலை. எந்த ஒரு சுப நிகழ்ச்சிக்கும், சேலைக்கே முதலிடம்..

கோவில் திருவிழா, கல்யாணம் முதலிடம் சேலை வகிக்கும்.. அதிலும் பட்டு சேலை  என்றால் அலாதி பிரியம் பெண்களுக்கு..பட்டில்  தான் எத்தனை வகை,, சின்னாளப்பட்டு, வாரணாசி பட்டு, காஞ்சிபுரம் பட்டு, ஆரணி பட்டு .. அப்புறம் வாயில் சேலை, நூல் சேலை, வேலைப்பாடுகள் செய்யப்பட்ட சேலை நிறைய உண்டு..

இன்று உலக சேலை தினம்.. அதான்.. சேலை உற்பத்தியில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. பட்டு சேலைக்கு உலகம் முழுக்க மவுசு.. நல்லி, குமரன், போத்தீஸ் போன்ற கடைகள் மிகப் பிரசித்தமான சேலைகள் உலகெங்கும் கிளைகள் உள்ளதால் உலக மக்கள் வாங்கி அணிந்து மகிழ்கின்றனர்…

2009- ல் நளினி சேகர் என்பவர் அனுசரித்தார். உலக அளவில் பாரம்பரிய உடை சேலைக்கு தனி சிறப்பு வழங்க வேண்டி ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 21- ஆம் தேதி சேலை தினம் அறிவித்தார். கைத்தறி சேலைகள், தான் முதன்  முதலில் அறிமுகமானது. பின்பு தான் பட்டு, சின்தெடிக்  சேலைகள் அறிமுகமானது. மொத்தமாக 30 வகையான சேலைகள் உள்ளது…

பெங்காளி சேலைகள், மைசூர் சில்க், பெங்களுரு சில்க் போன்றவை விசேஷங்களுக்கு ஏற்றவை.. பெண் அரசியல் தலைவர்கள் கூட சேலையைத் தான் மிகவும் விரும்பி அணிவர்..

நாமும் சேலையைத் தான் விரும்பி அணிகிறோம்…கலாச்சார உடை சேலை… பெண்களே சேலை அணிவோம்.. பண்பாடு காப்போம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *