உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர்!

இந்த வெற்றியின் மூலம் குகேஷ் சாம்பியன் பட்டம் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நடப்பு சாம்பியனான சீன வீரர் டிங் லிரனை எதிர்த்து இந்தியா சார்பாகத் தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் விளையாடி வருகிறார்.

10 சுற்றுகள்வரை நடைபெற்ற போட்டியில், இரு வீரர்களும் தலா ஓரு வெற்றியைப் பெற்றனர். பிற ஆட்டங்கள் அனைத்தும் டிராவில் முடிவடைந்தன.  இந்நிலையில் ஞாயிறன்று நடைபெற்ற 11வது சுற்றுப் போட்டியில் இரு வீரர்களும் மிகவும் நிதானமாக விளையாடினர்.

16 நகர்தலுக்காக டிங் 8 நிமிடங்களையும், 15 நகர்தலுக்காகக் குகேஷ் 15 நிமிடங்களையும் எடுத்துக் கொண்டனர். இதனால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, 28வது நகர்த்தலில் டிங் தவறான ஒரு நகர்த்தலை மேற்கொண்டார். இதைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட குகேஷ், ஆட்டத்தை வசப்படுத்தினார். இதையடுத்து தோல்வியை ஒப்புக் கொண்டார் டிங்.

இந்த வெற்றியின் மூலம் குகேஷ் இந்தத் தொடரில் 6க்கு5 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளார். இனி நடைபெறவிருக்கும் 3 ஆட்டங்களையும் டிரா செய்தாலே குகேஷ் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிவிடுவார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *