Women’s Asian Champions Trophy Ranchi 2023: இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி!

7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி!

7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மகளிருக்கான 7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி நடந்து வருகிறது. கடந்த 27ஆம் தேதி தொடங்கிய இந்த ஹாக்கி தொடர் வரும் நவம்பர் 5ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த ஹாக்கி தொடரில் இந்தியா, ஜப்பான், தென் கொரியா, சீனா, மலேசியா, தாய்லாந்து என்று 6 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.


இந்த நிலையில் தான் நேற்று நடந்த போட்டியில் இந்தியா மற்றும் சீனா அணிகள் மோதின. இதில், இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது. இதில், இந்தியா சார்பில் தீபிகா, சலிமா டெடே ஆகியோர் கோல் அடித்தனர்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்து நடக்க உள்ள போட்டியில் இந்தியா நடப்பு சாம்பியனான ஜப்பானை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு டக்கிறது. இதே போன்று இன்று நடக்கும் மற்ற போட்டிகளில் தென் கொரியா – தாய்லாந்து மற்றும் மலேசியா – சீனா அணிகள் மோதுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *