
சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி நடிக்கும் வெப்பன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
அண்மையில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் வசந்த் ரவி முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். ரஜினிக்கு மகனாக நடித்து, இறுதியில் வில்லனாக இருக்கும் வசந்த் ரவி பெரிதாகப் பேசப்பட்டார். இந்த நிலையில் வசந்த் ரவி அடுத்ததாக வெப்பன் என்ற படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மில்லியன் ஸ்டுடியோஸ் எம்.எஸ்.மன்சூர் தயாரிப்பில் குகன் சென்னியப்பன் இயக்கி இருக்கும் படம் வெப்பம்.
இதில் வசந்த் ரவி, சத்தியராஜ் முக்கிய கேரக்டர்களில் நடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்கள் தவிர ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை, தன்யா ஹோப், யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா எனப் பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் வெப்பன் படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. விரைவில் படத்தின் டிரெய்லர், ஆடியோ வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் வெப்பன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
வெப்பன் படத்தின் பிளாஷ்பேக் காட்சிகள் ஏஐ தொழில்நுட்பம்மூலம் இளம்வயது சத்யராஜை கிராஃபிக்ஸில் படக்குழு உருவாக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள அப்பன் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




