Washington: விநோத வழக்கு தொடுத்த  பெண்!

அமெரிக்காவில் விநோத வழக்கு தொடுத்த  பெண்!

34 ஆண்டுகளுக்கு முன்பு வாஷிங்டனில்  கருத்தரிப்பு மையத்திற்கு  சென்ற பெண்ணுக்கு சிகிச்சை பார்த்த  மருத்துவர்  தனது விந்தயே அந்த பெண்ணுக்கு செலுத்திய உண்மை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்தப் பெண் மருத்துவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

வினோ அமெரிக்க மாநிலமான இடாஹோவில் உள்ள ஹவுசரைச் சேர்ந்த 67 வயதான ஷரோன் ஹேய்ஸ், 1989 ஆம் ஆண்டில் வாஷிங்டனின் ஸ்போகேனை தலைமையிடமாகக் கொண்ட மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் டேவிட் ஆர் கிளேபூலிடம் கருவுறுதல் பிரச்சனை காரணமாக அவரும், அவரது கணவரும் சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட சோதனையில் அவர்களுக்கு சில குறைபாடுகள் இருப்பதாக  மருத்துவர் கூறியுள்ளார். இதனால் வேறு ஒருவரின் விந்தணுவை பயன்படுத்திக் கொள்ள சம்மதித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு அந்த பெண்ணின் மகள் மரபணு சோதனை வலைத்தளத்தில் தனது டி.என்.ஏவை சமர்ப்பித்த பின்னர் தனது உண்மையான தந்தையைக் கண்டுபிடித்துள்ளார். அப்போது தான் குழந்தை பெற்ற தாய்க்கு தனக்கு செலுத்தப்பட்டது தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவருடையது என்பது தெரி வந்துள்ளது.

இதனையடுத்து அப் பெண் மருத்துவரின் ஏமாற்றுவேலை குறித்து வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் திருமதி ஹெய்ஸ் கூறுகையில் தான் ஒரு ஊர்  பெயர் தெரியாத அநாமதேய நன்கொடையாளர் இடமிருந்து பெற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கு மருத்துவர் அப் பெண் கூறியது போலவே கண் மற்றும் முடி நிறம் என அனைத்தும் தேர்வு செய்வதோடு, தானம் வழங்குபவர் உடல்நலம் மற்றும் மரபியல் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர் என்றும் தெரிவித்தாகவும் கூறப்படுகிறது. மருத்துவர் தன்னை ஏமாற்றி விட்டதாக ஸ்போக்கேன் கவுண்டி சுப்பீரியர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

மேலும்  சிகிச்சைகள் ஒவ்வொன்றிற்கும், டாக்டர் கிளேபூல் $ 100 ரொக்கமாக வசூலித்தார் என்றும், பெண்ணிடம் வசூலிக்கப்பட்ட பணம்  விந்தணுவை தானமாகக் கொடுத்த கல்லூரி அல்லது மருத்துவ மாணவர்களுக்கு கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் கொடுக்கப்பட்ட விந்தணு மருத்துவருடையது.

செலுத்தப்பட்ட விந்தணுவில் இருந்து அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.தற்போது அந்த பெண்ணுக்கு33 வயது  ஆகிறது. சமீபத்தில் அவரது மகள் பிரையன் ஹேய்ஸ் அவருடைய டி.என்.ஏ வை மரபணு சோதனை மற்றும் பரம்பரை வலைத்தளமான 23 மற்றும் மீ-க்கு சமர்ப்பித்த பின்னர் தனது உயிரியல் தந்தையின் அடையாளத்தைக் கண்டறிந்தார்.

சிகிச்சை அளித்த மருத்துவர் மீது   நம்பிக்கை மோசடி வழக்கு தொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *