கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் உடல் இன்று தகனம் செய்யப்படுகிறது.
சென்னை கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு (70), கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் அவருக்குப் பல்துறை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், 70 நாட்களாகச் சிகிச்சை பெற்று வந்த வி.எஸ்.பாபு நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, அவரது உடல் பெரம்பூரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. முதலமைச்சர் விஜய், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், வி.எஸ்.பாபுவின் உடல் இன்று மாலை 4.30 மணியளவில் திரு.வி.க. நகர் தாங்கல் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.


