3-ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட புதிய பொருட்கள்!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜய கரிசல்குளத்தில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 18 குழிகளிலிருந்து, உடைந்த நிலையில் சூடு மண் உருவ பொம்மை, வட்ட சில்லு, தங்க மணி, சூது பவள மணி உட்பட 3,350-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் கிடைக்க பெற்றுள்ளன.

இந்நிலையில் தற்போது இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் பணியின்போது மனித உருவத்தின் சுடுமண் கால் பகுதி, விலங்கின் பல், பளிங்கு கல் ஆகியன கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் கூறியபோது…

அகழாய்வில் ஏற்கெனவே சுடுமண் மனித உருவத்தின் தலை பகுதி கிடைத்த நிலையில் தற்போது உடைந்த நிலையில் கால் பகுதி கிடைத்துள்ளது. தற்போது கிடைத்துள்ள பல் எந்த விலங்குடையது, என்ன காலம் என்பது முழுமையான ஆய்விற்குப் பின் தெரியவரும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *