Virudhachalam Accident: கல்லூரி மாணவன் பலி!

விருத்தாசலம் அருகே டாட்டா ஏசி வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி படிக்கும் மாணவன் சம்பவ இடதிலேயே பலியான சம்பவம் அப்பகுதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுக்கா கோ.பவழங்குடி பெரிய காலனி பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரையின் மகன் நிதிஷ்குமார் என்பவர் அங்குச் செட்டி பாளையத்தில் உள்ள அன்னை தெரசா பொறியியல் கல்லூரியில் (B.E.- 2nd year (CS) படித்து வருகிறார். இன்று 22.12.2023 ந் தேதி 18.15 மணி அளவில் நிதிஷ்குமார் தன்னுடைய TN 91 AW 5818 என்ற பல்சர் இருசக்கர வாகனத்தில் மங்கலம்பேட்டையிலிருந்து விருத்தாசலம் நோக்கிச் சென்றார்.

அப்போது பெரிய வடவாடி ஷானு பேக்கரிக்கு அருகில்விருத்தாசலம் தாலுகா விளாங்காட்டூர் பகுதியைசேர்ந்த ராஜா (33) த/பெ, கிருஷ்ணமூர்த்தி என்பவர் விருந்தாலத்திலிருந்து ஒட்டி வந்த டாட்டா ஏசி வாகனம் டேங்கர் லாரியை முந்திச் சென்றபோது டாட்டா ஏசி வாகனம் நிதீஷ்குமார் மீது மோதியதில் நிதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார் நிதீஷ் குமார். ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் டேங்கர் லாரியின் முன்புறத்தில் மாட்டிக் கொண்டது.

இதுகுறித்து அறிந்த விருத்தாசலம் காவல் உட்கோட்ட மங்கலம் பேட்டை காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜராஜன் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறுஆய்வுக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *