Post Office Theft: லாக்கரோடு பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள்!

திருவாடானை அருகே போஸ்ட் ஆபீஸ் கதவை உடைத்து லாக்கரோடு பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ளது T. நாகனி கிராமம். இந்தக் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம், பால் உற்பத்தி கூட்டுறவு சங்கம் போஸ்ட் ஆபீஸ் என ஒரே கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்தப் போஸ்ட் ஆபீஸில் திருப்பாக்கட்டையைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மனைவி சிவரஞ்சனி தற்காலிகமாகப் பணியாற்றி வருகிறார்.

மேலும் கடந்த 21 ஆம் தேதி முதல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் மகள் பவதாரணி நிரந்தர போஸ்ட்மேனாக நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வரும் நிலையில் தினமும் கிளி அஞ்சல காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை அலுவலகப் பணி பார்ப்பதாகவும் பணம் சம்பந்தப்பட்ட அன்றாட சொத்துக்களை அலுவலகத்திலேயே வைத்துப் பூட்டி விட்டுச் செல்வதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவ நாளான நேற்று அலுவல் முடித்து ரூ.19 ஆயிரத்து 834 பணத்தை லாக்கரை வைத்துப் பூட்டிவிட்டு சாவியை எடுத்துச் சென்று உள்ளார். மறுநாள் காலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வேலை பார்க்கும் அதேவரை சேர்ந்த கங்கா மற்றும் வைரமணி ஆகியோர் போஸ்ட் ஆபீஸ் இன் கதவின் தாய்ப்பால் உடைக்கப்பட்ட இருப்பதாகப் பவதாரணிக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பவதாரணி உடனடியாகப் போஸ்ட் ஆபீஸ் கதவின் தாய்ப்பால் வெளிப்புறமாக உடைக்கப்பட்டு இருப்பதாகக் கண்டு உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே லாக்கரில் இருந்த பணம் 19 ஆயிரத்து 834 ரூபாய் லாக்கரோடு திருடு போனதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உடனடியாகத் திருவாடானை காவல் நிலையத்தில் திருடு போனது தொடர்பாகப் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் லாக்கரோடு பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசித் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *