
ஜனவரி 26 குடியரசு தின விழாவை ஒட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை ஏகனாபுரம் கிராம மக்கள் புறக்கணித்த நிலையில் இன்று மீண்டும் சிறப்பு கிராம சபை கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர்,
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் புறக்கணிப்பு. ஏற்கனவே 6 முறை கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும்,5 முறை கிராம சபை கூட்டத்தைப் புறக்கணித்த நிலையில் மத்திய மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று 6-வது முறையாகக் கிராம சபை கூட்டத்தைப் புறக்கணித்து உள்ளனர்.கிராம சபை கூட்டத்தைப் புறக்கணிக்கும் கிராம மக்களிடம் தமிழக அரசுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனப் போராட்டக் குழுவினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.மேலும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்க ஈடுபடுவதாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாகத் தகவல்வெளியாகியுள்ளது.
சென்னை மீனம்பாக்கத்திற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய விமான நிலையம் அமைக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் முடிவு செய்து காஞ்சிபுரம் மாவட்டம் பரந்து சுற்று வட்டார 20 கிராமப்புறங்களை உள்ளடக்கி உள்ளடக்கிச் சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கப்படுவதால் குடியிருப்புகள் விலை நிலங்கள் நீர்நிலைகள் உள்ளிட்டவைகள் பாதிக்கப்படும் எனக் கூறி கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.உண்ணாவிரதப் போராட்டம், கருப்புக்கொடி போராட்டம், சாலை மறியல், தலைமை செயலகத்தை நோக்கிப் பேரணி, டிராக்டர் பேரணியெனப் பல்வேறு விதமான போராட்டங்களை மேற்கொண்டு வரும் நிலையில் 589 வது நாளாக இரவு நேரங்களில் ஒன்று கூடி மத்திய மாநில அரசுகளை எதிர்த்துக் கோஷங்களை எழுப்பி நாள்தோறும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் விமான நிலையம் அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்ட நாள் முதல் நடைபெற்ற ஆறு கிராம சபை கூட்டங்களில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒருமனதாகத் தீர்மானங்களை நிறைவேற்றியும்,5 கிராம சபை கூட்டத்தைப் புறக்கணித்து உள்ளனர்.இந்நிலையில் ஜனவரி 26 குடியரசுத் தினத்தை ஒட்டிக் கிராம சபை கூட்டம் நடைபெறும் எனத் தமிழக அரசு அறிவித்த நிலையில் கிராம மக்கள் புறக்கணித்திருந்தனர்.அதனைத் தொடர்ந்து இன்று ஏகனாபுரம் கிராமத்தில் கிராம சபை கூட்டம்ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சரவணன் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அரசு அதிகாரிகளும் வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்ட நிலையில் ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் யாரும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஒருமனதாகப் புறக்கணிப்பு செய்தனர்.
ஊராட்சி மன்ற நிர்வாகம், அரசு அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்ட கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிராம சபை கூட்டத்தைப் புறக்கணித்தபின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போராட்ட குழுச் செயலாளர் சுப்பிரமணியன் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கிராம சபை கூட்டத்தைப் புறக்கணித்துள்ள கிராம மக்களிடம் அரசுப் பேச்சுவார்த்தை நடத்தாத நிலையில் மீண்டும் மீண்டும் வந்து கிராம சபை கூட்டத்தை நடத்துகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைத்த நடவடிக்கை கைவிடாவிட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் வேறு வகையான போராட்டங்களை நடத்துவோம் எனச் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்

