3 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

கனமழை காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அந்தமான் அருகே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை தெரிவித்துள்ளார்.

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறக்கூடும் எனவும், அடுத்து உருவாகும் புயலுக்கு ‘அர்னாப்’ என பெயர் வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் 26 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் உத்தரவிட்டுள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *