கடந்த திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களில் தமிழ்நாட்டின் உள்ளூர் பொருளாதாரம் போதிய அளவில் வளர்ச்சி அடையவில்லை என நாம் தலைவர் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் நாம் தலைவர் இயக்கம் சார்பில் பிரம்மாண்டமான பெண்கள் வளர்ச்சி மாநாடு நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது, பெண்களை தொழில் முனைவோராக மாற்ற வேண்டும் என்பதே தங்கள் இயக்கத்தின் இலக்கு என்று தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய், நுாலகத்தை திறக்க செல்வதற்கு 6 கோடி ரூபாய் செலவு, செய்வதாகவும், தமிழகத்திற்கு புதிய தொழிற்சாலைகளும், வேலைவாய்ப்புகளும் தான் தேவை என்றும் குறிப்பிட்டார். கடந்த கால திமுக மற்றும் அதிமுக ஆட்சிக் காலங்களில் தமிழ்நாட்டின் உள்ளூர் பொருளாதாரம் போதிய அளவில் வளர்ச்சி அடையவில்லை என்று குற்றம் சாட்டினார்..
பெண்களின் முன்னேற்றம் மற்றும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்திற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். கரப்பான் பூச்சி கட்சிக்கு தனது ஆதரவு இல்லை என்று கூறினார்..

