விஜய்யின் முட்டாள்தனமான அரசியல்..அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்.! 

Advertisements
தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் முட்டாள்தனமான அரசியல் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார் என்று பரபரப்பு குற்றம் சாட்டுகிறார்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள் . திமுக மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விடக்கூடாது என்ற கொள்கையை குறிக்கோளாகக் கொண்ட நடிகர் விஜய் , தற்போது எடுத்திருக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் திமுகவுக்கு சாதகமாகவே அமைந்துள்ளன விஷயம் தெரியாமல் நடிகர் விஜய் அரசியல் நடத்துகிறார் என்பது அரசியல் பார்வையாளர்களின் அதிரடி தகவல்களாக இருக்கிறது .
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்த நடிகர் விஜய் ,  திடீரென அரசியல் களத்தில் இறங்கி இருக்கிறார் . தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தேர்தல் பிரச்சார பயணங்களையும் மேற்கொண்டு வருகிறார் . அரசியல் பற்றி அறவே தெரியாத நடிகர் விஜய்க்கு நல்ல ஆலோசனைகள் வழங்குவதற்கு தக்க உதவியாளர்கள் இல்லை என்பது வேதனைக்குரிய செய்தி ஆகும் .
தமிழக அரசியல் களத்தை எப்படி கையாள்வது என்பது விஜய்க்கு தெரியவில்லை. சூழ்நிலைக்கு தக்கபடி யார் யார் என்ன சொல்கிறார்களோ அதைக் கேட்டு தனது பயணத்தை  தொடர்ந்து நடத்தி வருகிறார் . தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புசி ஆனந்த் ஜான் ஆரோக்கியசாமி ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தரும் ஆலோசனைகள் தவறாகவே முடிகின்றன .
இந்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவுக்கு வந்த தமிழக வெற்றி கழகத்திற்கு தற்பொழுது காங்கிரஸின் ஆதரவும் இல்லை என்று தெரிய வருகிறது . திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.  தற்பொழுது இந்த குழு சார்பில் அமைச்சரவையில் பங்கு கேட்காமல் தொகுதி மட்டும் அதிகப்படுத்தி தரும்படி கேட்கலாம் என முடிவு செய்யப்பட்டு இருக்கிறது .
ஏற்கனவே நடிகர் விஜய் தனி கட்சி தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டில் அவருக்கு 15 சதவீத வாக்குகள் தான் கிடைக்கும் என அனைத்து தரப்பு கருத்துக்கணிப்புகளும் தெரிவித்து விட்டன. இதே வேளையில் திமுகவுக்கு 45 சதவீத வாக்குகளும் அதிமுகவுக்கும் 39 சதவீத வாக்குகளும் இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன . இந்த நிலையில் நடிகர் விஜய் கூட்டணி அமைத்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பை பற்றி யோசிக்க முடியும் என்ற சூழ்நிலை இருக்கிறது .
கூட்டணியை பொறுத்தவரையில் திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் காங்கிரஸ் மதிமுக முஸ்லிம் லீக் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவை பலம் கொண்டவையாக இருக்கின்றன . அதிமுகவை பொருத்த வரையில் பாஜக பாமக தேமுதிக என்று கணக்கு போட்டு வருகிறது . அந்த வகையில் நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று அறிவித்திருக்கும் விஜய்க்கு ஆதரவாக பலமான கூட்டணி சேரவில்லை . தமிழ்நாட்டில் வழக்கம் போல மூன்றாவது கூட்டணி என்று கிளம்பி வருவார்கள். கேப்டன் விஜயகாந்த் கூட மூன்றவது அணி அமைத்தார் ஆனால் திமுகவை ஒன்றும் செய்ய முடியவில்லை .
இதேபோல் தற்பொழுது விஜய் தலைமையில் மூன்றாவது கூட்டணி அமைகிறது . இதில் செங்கோட்டையன் இணைந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த காரைக்கால் தொகுதி முன்னாள் எம்எல்ஏ அசனார் புதுச்சேரி எம்எல்ஏ சாமிநாதன் ஈரோடு அதிமுக பொருளாளர் சத்யபாமா டிடிவி தினகரன் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரும் வரிசையாக தமிழக வெற்றிக் கழகத்தில் சேர போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன .
தவெகவில் சேரக்கூடிய செங்கோட்டையன் சத்தியபாமா டிடிவி தினகரன் ஓ பன்னீர்செல்வம் ஆகிய அனைவருமே அதிமுக கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவர்கள் . தற்பொழுது இவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் சேரும் வகையில் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து தான் அரசியல் பேசுவார்கள். அதிமுகவை சேர்ந்த இவர்கள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததால்  இவர்களது ஆதரவாளர்களும் தவெகவை ஆதரிப்பார்கள் ஆகவே அதிமுகவின் ஓட்டு வங்கி தான் சுக்கு நூறாக சிதறும் என தெரிகிறது .
தமிழக வெற்றி கழகத்துடன் இவர்கள் இணையும் பட்சத்தில் அதிமுகவின் வாக்கு வங்கி 39 சதவீதத்திலிருந்து 29 சதவீதமாக குறையும் என தெரியவந்துள்ளது  . அதேசமயம் திமுகவை பொருத்த வரையில் 45 சதவீத வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும் என்பது ஏற்கனவே உறுதியான தகவல் மேலும் தற்பொழுது,  அதிமுக சார்புடையவர்களை தமிழக வெற்றி கழகம் தங்கள் பக்கம் இணைத்துக்கொள்ளும் பொழுது திமுகவின் வாக்கு வங்கி இன்னும் உயரத்தான் செய்யும் என்பது கணக்கீடாக இருக்கிறது .
எனவே திமுகவை எதிர்த்து அரசியல் செய்ய வந்த நடிகர் விஜய் தற்பொழுது தனது செயல்பாடுகள் மூலம் திமுகவை வெற்றி பெற வைக்கும் வேலைகளைச் செய்து வருகிறார் . ஒருவேளை இவர் திமுகவின் சிலிப்பர் செல்லாக இருப்பாரோ என்று கூட சந்தேகம் ஏற்படும் அளவுக்கு அரசியல் பார்வையாளர்கள் இப்பொழுது புதிய தகவலை வெளியிட ஆரம்பித்திருக்கிறார்கள் . உதயநிதி ஸ்டாலினும் விஜய்யும் நெருக்கமான நண்பர்கள் எனவே உதயநிதி ஸ்டாலின் மூலம் திமுகவுக்கு எதிரான ஒரு திட்டத்தை போட்டு அதிமுகவின் ஓட்டு வங்கியை சிதற செய்வதற்காக விஜய் கட்சி ஆரம்பித்தாரா? என்று கூட அரசியல் பார்வையாளர்கள் சந்தேகப்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.
தற்பொழுது டிடிவி தினகரன் ஓ பன்னீர்செல்வம் செங்கோட்டையன் போன்றோர் தமிழக வெற்றி கழகத்தில் இணைவதன் மூலம் ஏற்கனவே 15 சதவீதமாக இருந்த தமிழக வெற்றி கழகத்தின் வாக்கு வங்கி 25 சதவீதமாக உயரலாம் என்று தெரிகிறது . இருந்த போதிலும் தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகள் அதிமுக கூட்டணியை தோற்கடிப்பதாகவே அமைகின்றன அந்த வகையில் மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்று பலமாக பேசப்படுகிறது .
மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் தான் விஜய் அரசியல் களத்தில் இறங்கி இருக்கிறார் . ஆனால் அதனை அவரால் சரியாக செயல்படுத்த முடியவில்லை . தமிழக அரசியல் களம் அவர் நினைப்பது போல் இல்லை இது மிகப்பெரிய போர்க்களம். சண்டையிட்டு ஜெய்ப்பதற்கு இது ஒன்றும் சினிமா காட்சி இல்லை என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள் .
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *