Vijay Makkal Iyakkham: சிலம்பம் வீராங்கணைக்கு நிதி உதவி!

Advertisements

தேசிய சிலம்ப விளையாட்டில் பங்கேற்க செல்லும் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் உள்ள சிலம்பம் வீராங்கனை லியா ஸ்ரீ என்ற மாணவிக்குத்  விஜய் மக்கள் இயக்கத்தினர் நிதி உதவி தொகை வழங்கி அசத்தியுள்ளனர்.

கோவை மாவட்ட தளபதி மக்கள் இயக்கம் தொண்டாமுத்தூர் தொகுதியில்  ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, ரம்ஜான், பொங்கல், கிறிஸ்துமஸ் என ஒவ்வொரு பண்டிகை கால நேரங்களில் பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ்  விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டாடி உள்ளனர்.

அதன்படி பொறுப்பாளர் ஃபைசல் தலைமையில் மைல் கல் பகுதியில் உள்ள ஐ.பி.ஏ.கிறிஸ்தவ ஆலயம் முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை வடக்கு.மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் சம்பத் குமார், மற்றும் சமூக ஆர்வலர் குப்புராஜ் ஆகியோர்  கலந்து கொண்டு, ஆலயத்திற்கு வந்த அனைவருக்கும் கேக் வழங்கிக் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

அது மட்டுமின்றி ஏழை குடும்பத்தினருக்கு அரிசி, மளிகை பொருட்கள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர், அதே பகுதியில் வசிக்கும் சிலம்பம் வீராங்கனையான  லியா ஸ்ரீ என்ற மாணவிக்கு உதவி தொகை வழங்கி அசத்தியுள்ளனர்.

தேசிய அளவில் நடைபெற உள்ள போட்டியில் கலந்து கொள்ள நிதியில் இல்லாமல் தவித்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வழங்கிய இந்த உதவி தொகை பெரிய உதவியென நெகிழ்ச்சி பொங்க அவர் தெரிவித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *