Advertisements

இந்தியா முழுவதும் பரபரப்பு கிளப்பிய வாக்கு திருட்டு பட்டியலை நான் தவறாக கொடுத்து விட்டேன் என ராகுலுக்கு வாக்காளர் பட்டியல் கொடுத்தவர் மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.
மராட்டிய மாநிலத்தில் கடந்த தேர்தலில் வாக்கு திருட்டு நடந்திருக்கிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொடுத்த புகாரை தொடர்ந்து இந்தியா முழுவதும் இந்த அலை வீசி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் போல கர்நாடகாவில் பெங்களூர் மத்திய லோக்சபா தொகுதியான மகா தேவ புரா வாக்காளர் பட்டியலை வெளியிட்டு இதிலும் வாக்கு திருட்டு நடந்துள்ளது என அவர் குற்றம் சாட்டினார்.
இதனை தொடர்ந்து ஏராளமான தொகுதிகளில் வாக்கு திருட்டு மூலம் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்ததாக காங்கிரசார் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
போலி வாக்காளர்கள் போலி முகவரி ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள் இருப்பதாக ராகுல் காந்தி அடுக்கடுக்காக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார் .
இதற்கு ஆதாரமாக தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார் என்பவர் வெளியிட்டிருந்த புள்ளி விவரங்களையும் ராகுல் காந்தி வெளியிட்டார் .
இதன் அடிப்படையில் தான் வாக்கு திருட்டு என்பது பரபரப்பாக பேசப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் கமிஷன் மறுத்த போதும் ராகுல் காந்தி விடாப்பிடியாக இது குறித்து பேசி வந்தார். அது மட்டுமல்லாமல் பிரம்மாண்ட பேரணியும் நடத்தினார்.
இந்த நிலையில் ராகுல் காந்தி வசம் வாக்காளர் பட்டியல் கொடுத்த தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார் அதில் பிழை இருப்பதாக திடீரென பல்டி அடித்திருக்கிறார் .
காங்கிரஸ் அரசியல் வரலாற்றில் இது மிகப்பெரிய பிழையாகவும் இந்திய அரசியல் வரலாற்றில் திடீர் திருப்பம் ஆகவும் சஞ்சய் குமார் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
இது குறித்து சஞ்சய் குமார் பேசும்பொழுது பிழையான புள்ளி விவரங்களை வெளியிட்டதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் மகாராஷ்டிரா தேர்தல் தொடர்பாக வெளியிட்டிருந்த பதிவுக்காக நான் கொடுத்த பட்டியல் தவறானது .
2024 ல் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் தரவுகளை ஒன்றாக வைத்து ஒப்பிடும் பொழுது இந்த பிழை ஏற்பட்டுவிட்டது .
எனது ஆய்வுக் குழு இந்த தரவுகளை பிழையாக படித்து கணக்கிட்டு விட்டார்கள் தவறு என தெரிந்ததும் உடனடியாக நான் அந்த பதிவை நீக்கிவிட்டேன் தவறான புள்ளி விவரங்களை வெளியிட்டதில் எனக்கு எந்த அரசியல் உள் நோக்கமும் இல்லை என்னை மன்னித்து விடுங்கள் என்று கேட்டுள்ளார் .
இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியினர் தற்பொழுது ராகுல் காந்திக்கு எதிராக போர்க்கொடி பிடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
Advertisements



