கோழி இறைச்சி வியாபாரிகளுக்கு புதிய சிக்கல்? புதிய நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு.!

நாகர்கோவிலில் தமிழ்நாடு கறிக்கோழி மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, கோழிகளை இறைச்சிக் கடைகளுக்கு அனுப்பும் முன் தீவனம் வழங்குவது தொடர்பான புதிய நடைமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

கோழிகளை அனுப்புவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பே தீவனத்தை நிறுத்த வேண்டும் என்ற நடைமுறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் வரும் 31ஆம் தேதி முதல் இறைச்சிக் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்தனர்.

தீவனக் கட்டுப்பாடுகளுடன் கோழிகளை ஏற்றிச் செல்லும் நடைமுறையை அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *