Advertisements

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி சந்திக்க உள்ளார். துணை ஜனாதிபதி தேர்தல் வருகின்ற 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியக் கூட்டணி சார்பில் முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனும் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் ஒவ்வொரு மாநிலமாகச் சென்று தங்களது கூட்டணிக் கட்சி தலைவர்களைச் சந்தித்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.
இதில் இந்தியக் கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தனது தேர்தல் சுற்றுப் பயணத்தை தமிழ்நாட்டில் இருந்து தொடங்க திட்டமிட்டுள்ளார்
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சுதர்சன் ரெட்டி சந்திக்க உள்ளார்.
Advertisements
