Velu Narayanasamy: இந்த மாதத்தில் கூட்டணி பேச்சு வார்த்தை முடியும்!

Advertisements

இந்தியா கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்றும் கூட்டணி பேச்சு வார்த்தை இந்த மாதத்தில் முடிவடையும் என்றும் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி காரைக்காலில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அதில் புதுச்சேரி மாநிலத்தில் மின் துறையைத் தனியார் மையம் ஆக்குவதற்கும் ப்ரீபெய்ட் மீட்டர் திட்டத்தைக் கொண்டு வருவதற்கும் காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் இந்தத் திட்டத்தை அமுல்படுத்தினால் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார்.

மேலும் புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள்வரை அனைவரும் ஊழலில் சிக்கி உள்ளனர் என்றும் மதுபான தொழிற்சாலை, ரெஸ்டோ பார் தொடங்குவதற்கு முதலமைச்சர் ரங்கசாமி லஞ்சம் வாங்கியுள்ளதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டினார்.

மேலும் இந்தியா கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்றும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணிகுறித்து காங்கிரஸ் கட்சி கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளது என்றும் இந்த மாதம் இறுதியில் இந்திய கூட்டணியின் கூட்டணி பேச்சு வார்த்தை முடியும் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *