Vellore Ibrahim: கைது!

Advertisements

இப்ராஹிம் உட்பட 15 பேர் கைது!

விருத்தாசலம்: அனுமதியின்றி கொடியேற்ற வந்தாக பா.ஜ.க சிறுபான்மை நலபிரிவு செயலாளர்  வேலூர் இப்ராஹிம் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வீடு அருகே இருந்த பாரதிய ஜனதா கட்சி கொடி அகற்றப்பட்டது. இதனை கண்டித்து பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் இன்று (1-ந்தேதி) முதல் நாள் ஒன்றுக்கு 100 பா.ஜனதா கொடிகம்பங்கள் ஏற்றப்படும் என பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

அதன்படி கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள பூதாமூரில் இன்று பா.ஜனதா கட்சி கொடியேற்றம் நடைபெற இருந்தது. இதற்காக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் கட்சி கொடியேற்றுவதற்காக பா.ஜனதா சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் வந்து இருந்தார். ஆனால் கட்சி கொடி கம்பம் மற்றும் கொடியேற்ற அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது.

எனவே, போலீசார் கட்சி கொடி ஏற்றுவதை தடுத்தனர். இதனால் பா.ஜ.க.வினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இப்ராஹிம் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அங்குள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். பூதாமூரில் பரபரப்பான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *