
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகளைத் தடுக்க வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்திப் புதுச்சேரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகளைத் தடுத்திட வாக்குச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.இந்திய தேர்தல் துறை நாடாளுமன்ற பொது தேர்தலை நேர்மையாக நடத்த 100 விழுக்காடு ஒப்புகை சீட்டுகளை எண்ணி தேர்தல் முடிவு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச் செயலாளர் தேவ. பொழிலன் தலைமை தாங்கச் சிறப்பு விருதுந்தினராகக் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, எதிர்க்கட்சித் தலைவர் சிவா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம் புதுச்சேரி மாநில திராவிட கழக தலைவர் சிவ. வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
