ரகுல் – ஜாக்கி தம்பதி வெளிநாட்டிற்கு ஹனிமூன் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் தங்கள் ஹனிமூனை தள்ளிப்போட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு வெளியான கில்லி என்ற கன்னட படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். தமிழில் தடையற தாக்க என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்க வில்லை என்றாலும், தெலுங்கில் முன்னணி நடிகையாக மாறினார்.
மேலும் தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே உள்ளிட்ட தமிழ் படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார் ரகுல். சமீபத்தில் அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த அவர், இந்தியன் 2, இந்தியன் 3 படத்திலும் நடித்து வருகிறார்.
ஹிந்தியில் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங் தொடந்து பல பாலிவுட்டிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இந்தச் சூழலில் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஜாக்கி பக்னானிக்கும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு முதல் ரிலேஷன்ஷிப்பிலிருந்து வந்தனர்.
. தற்போது முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல், 33 வயதில் தனது காதல் ஜாக்கி பக்னானியை கரம்பிடித்துள்ளார். இவர்களின் திருணம் நேற்று முன் தினம் கோவாவில் கோலாகலமாக நடைபெற்றது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில் ரகுல் – ஜாக்கி தம்பதி வெளிநாட்டிற்கு ஹனிமூன் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் தங்கள் ஹனிமூனை தள்ளிப்போட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முதலில் தங்கள் பட வேலைகளில் கவனம் செலுத்த போவதாகவும் இந்தத் தம்பதிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக ஜாக்கியின் தயாரிப்பில் அக்ஷய் குமார், டைகர் ஷெராஃப் நடித்தும் வரும் Bade Miyan Chote Miyan படத்தின் ரிலீஸுக்கு பிறகே ஹனிமூன் என்ற முடிவை எடுத்துள்ளார்களாம். மேலும் ஷாகித் கபூர் நடிப்பில் உருவாகி வரும் படத்தையும் ஜாக்கி தயாரித்து வருகிறார்.
மறுபுறம் ரகுலும் தமிழ், ஹிந்தி படங்களில் பிசியாக இருக்கிறார். எனவே தங்கள் திரைப்பட பணிகளை முடித்து விட்டு ஹனிமூன செல்ல இந்தப் புதுமண தம்பதி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அக்ஷய் குமார் படங்களை ஜாக்கி பக்னானி தொடர்ந்து தயாரித்து வருகிறார். அந்த வகையில் ராட்சசன் படத்தின் ஹிந்தி ரிமேக்கான கட்புட்லி படத்தை ஜாக்கி தான் தயாரித்தார். இந்தப் படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீதி சிங் நடித்திருந்தார்.
இந்தப் படத்தின் பணிகளின்போது தான் ரகுல் – ஜாக்கி இடையே காதல் மலர்ந்துள்ளது. Bade Miyan Chote Miyan படம் ஏப்ரல் 8-ம் தேதி வெளியாக உள்ளது. அதன்பின்னர் இருவரும் ஹனிமூன செல்ல உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
