
அதிமுகவுடன் கூட்டணி தொடர பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகப் பாஜக மாநில துணை தலைவர் வி.பி. துரைசாமி தெரிவித்துள்ளார்.
கூட்டணி பிளவுகுறித்த சர்ச்சைகள் எழுந்த நிலையில் அவசரமாகப் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்றுள்ளார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து பேசுவாரெனக் கூறப்படுகிறது. இதற்கிடையே, ஓபிஎஸ் தரப்பு பாஜக – அண்ணாமலை கூட்டணி முறிவுக்கு அதிருப்தி தெரிவித்தன. முதலமைச்சர் பதவி போட்டியால் அதிமுக பாஜகவிலிருந்து விலகியதாக ஓபிஎஸ் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்தச் சூழலில், அண்ணாமலை டெல்லி பயணம் சென்றிருந்த போதிலும் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி பொறுப்பாளர்களின் கூட்டம் நடத்தப்பட்டது. கேச விநாயகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக நிலைபாடு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விபி துரைசாமி,“ பாஜக – அதிமுக கூட்டணி நீடிப்பதற்காகவே மூத்த தலைவர்கள் பேசி வருவதாகவும், இரு கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும்” என்று கூறினார். மேலும் கூட்டணிகுறித்து நல்ல முடிவு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.



