V. J. Chitra: வேறு நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்ற மனு!

Advertisements

V. J. Chitra | Suicide case

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கு விசாரணையைத் திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திலிருந்து சென்னைக்கு மாற்றக் கோரி சித்ராவின் தந்தை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்…

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம், திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் பிணமாக மீட்கப்பட்டார். சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்துக்கு எதிராகப் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சித்ராவின் மரணம் தொடர்பான இந்த வழக்கின் விசாரணை திருவள்ளூர் மகளிர் சிறப்பு கோர்ட்டில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சித்ராவின் தந்தை காமராஜ், சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டும்கூட, விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.

மேலும் விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கத்தில் வேண்டுமென்றே ஹேம்நாத் அடுத்தடுத்து பல்வேறு மனுக்களைத் தாக்கல் செய்து வருகிறார். 2021-ம் ஆண்டில் இருந்தே இந்த வழக்கு, குற்றச்சாட்டைப் பதிவு செய்யும் கட்டத்திலேயே இருக்கிறது.முதுமை காரணமாகத் திருவள்ளூர் சென்று வருவதற்கு சிரமமாக இருக்கிறது. இந்த வழக்கில் சாட்சியாக இருக்கக்கூடியவர்கள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருப்பதால், சித்ராவின் வழக்கைத் திருவள்ளூரிலிருந்து சென்னைக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *