Uthamapalayam: காந்தி சிலை முன் அமர்ந்து 96 வயது முதியவர், மனைவியுடன் தர்ணா!

Advertisements

முதியவர் ஒருவர் தனது நிலத்தை மீட்டு தரக் கோரி காந்திசிலை முன் அமர்ந்து மனைவியுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

96 வயது முதியவரின் 50 செண்ட் இடத்தை அபகரித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடும் நபரிடமிருந்து தனது விவசாய நிலத்தை மீட்டு தரக் கோரி காந்திசிலை முன் அமர்ந்து முதியவர் மனைவியுடன் தர்ணா போராட்டம் நடத்தினார்.தங்களது நிலம் கிடைக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்த போவதாகவும் அந்த  முதியவர் தெரிவித்தார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா வேப்பம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த ராமசாமி என்ற 96 வயது முதியவர் வயது முதிர்வின் காரணமாகத் தனது நிலத்தைக் கடந்த 2021 ம் வருடம் பாலசுப்பிரமணி என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.

2022 ம் வருடம் பாலசுப்பிரமணி என்பவர் ராமசாமியிடம் வாங்கிய நிலத்தைக் குருசாமி என்பவருக்கு விற்பனை செய்துள்ளர்.

பாலசுப்பிரமணியிடம் வாங்கிய நிலத்த்துடன் சேர்த்து பாலசுப்பிரமணிக்கு விற்பனை செய்யாத முதியவர் ராமசாமி நிலத்தில் 50 செண்ட் நிலத்தைச் சேர்த்து குருசாமி அபகரித்து .வைத்துக் கொண்டுள்ளார் எனவும் பாதித்தப்பட்ட முதியவர் குருசாமியிடம் நீங்கள் அபகரித்த தனது நிலத்தை விட்டு வெளியேறுமாறு பல முறை தெரிவித்துள்ளார்.

 முதியவரின் பேச்சைக் கேட்காமலும் தனது தோட்டத்தில் பாதுகாப்பு பணியில் உள்ள பாலாஜி என்பவர்மூலம் முதியவர் குடும்பத்தாக்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் இவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தப் பலனும் இல்லை என்பதால்சின்னமனூர் நகரில் உள்ள காந்திசிலை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர், இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் 96 வயதான முதியவர் நிலத்தை அபகரித்த குருசாமி என்பவர் அரசு துறையில் பணி செய்து ஒய்வு பெற்றதாகவும் இதனால் அரசு அலுவலர்களுடன் தொடர்பில் இருப்பதால் தங்களுக்கு அரசு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டுவதாகவும் தங்களது நிலத்தை மீட்க தொடர்ந்து போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவித்தார்.

96 வயதான முதியவர் ராமசாமி கடந்த ஒரு வருடமாகத் தனது நிலத்தை மீட்க போராடி வருவதாகவும் பல முறை நிலத்தை அளவீடு செய்யச் சர்வேயருக்கு மனு அளித்தும் சம்மந்தபட்ட சர்வேயர் நிலத்தை அளவீடு செய்யக் குருசாமிக்கு பல முறை தபால் அளித்தும் இதுவரை அளவீடு செய்ய வர வில்லை எனவும் தனது நிலத்தை அளவீடு செய்ய வரும் சர்வேயர் அவர்களை நிலத்திற்க்குள் அனுமதிக்காமல் எங்கள்மீது கொலை மிரட்டல் விடுத்து வரும் குருசாமி மற்றும் அவரது தோட்ட பணியாளர் பாலாஜி என்பவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுத்துத் தங்களது நிலத்தை மீட்டு தர முதியவரும் அவர்களது குடும்பத்தார்களும் கோரிக்கை விடுத்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *