Advertisements

பாட்டாளி மக்கள் கட்சியும் மாம்பழச் சின்னமும் எனக்குத்தான் சொந்தம் என மருத்துவர் ராமதாஸ் மீண்டும் போர் கொடி பிடித்த நிலையில் அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியுடன் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி முடிவாகிவிட்டது இதனால் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் மருத்துவர் ராமதாஸ் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்
கடந்த ஏப்ரல் மாதம் முதல் 9 மாதங்களாக தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியில் மிகப்பெரிய மோதல்கள் நடைபெற்று வருகின்றன.இதன் இறுதிக் கட்டமாக அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சிக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் வழங்கி இருக்கிறது அது மட்டுமல்லாமல் மாம்பழ சின்னத்தையும் அன்புமணி தரப்பில் ஒதுக்கி இருக்கிறது
இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர் ராமதாஸ் தற்பொழுது டெல்லி உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருக்கிறார். போலியான ஆவணங்களை கொடுத்து அன்புமணி தரப்பினர் கட்சியின் உரிமையையும் மாம்பழ சின்னத்தையும் பெற்றுவிட்டனர் என அவர் புகார் மனு கொடுத்திருக்கிறார்.இது பற்றிய விசாரணை விரைவிலேயே நடைபெற இருக்கிறது
இதற்கிடையே அன்புமணி குறித்து மருத்துவர் ராமதாஸ் மிகவும் ஆவேசமாக பேசியுள்ளார்.அவர் பேசும்போது பாட்டாளி மக்கள் கட்சி என்பது நான் வியர்வை சிந்தி வளர்த்த ஆலமரம் அந்த மரத்தின் மேல் கிளையில் உட்கார்ந்து கொண்டு நீ அடிக்கிளையை வெட்டுகிறாய் கீழே விழுவது நீயாக த்தான் இருப்பாய். சூழ்ச்சியால் தன்னை தலைவன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான் எந்த நீதிமன்றத்திற்கு சென்றாலும் ராமதாசை வீழ்த்த முடியாது டெல்லி நீதிமன்றத்தில் வெற்றி பெறுவோம்
கடந்த 2022 ஆம் ஆண்டு திருவேற்காட்டில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உன்னுடைய பதவிக்காலம் முடிந்துவிட்டது நீ பணத்தால் தேர்தல் ஆணையத்தை விலைக்கி வாங்கி இருக்கிறாய் என்னுடன் இருந்தவர்களையும் விலைக்கு வாங்கி விட்டாய் இருந்தாலும் ஜெயிக்கப் போவது இந்த ராமதாஸ் தான் என்னதான் பணம் இருந்தாலும் உன்னால் ஒன்றும் செய்ய முடியாது. நீ ஒவ்வொரு கூட்டத்துக்கும் ரூபாய் 25 லட்சத்தை முன்கூட்டியே கொடுத்து தான் உன்னால் கூட்டத்தை கூட்ட முடிகிறது
கட்சி தொண்டர்கள் எல்லோரும் அய்யா தான் எங்களுக்கு எல்லாம் என்று நினைக்கிறார்கள் என்னை உன்னால் வெல்ல முடியாது மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள் இனிமேல் தான் பாட்டாளி மக்கள் கட்சி இன்னும் வளர்ச்சி அடையப் போகிறது வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஏராளமான சட்டப்பேரவை உறுப்பினர்களை உருவாக்கி அவர்களில் சிலரை அமைச்சராக உருவாக்கி காட்டுவேன் என்று பேசியிருக்கிறார்
இதற்கிடையே பாட்டாளி மக்கள் கட்சியும் மாம்பழ சின்னமும் தங்களுக்கு கிடைத்ததால் அன்புமணி தரப்பினர் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.இதனைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட போகும் கூட்டணியை அன்புமணி உறுதி செய்து விட்டதாக கூறப்படுகிறது ஏற்கனவே பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டாவை சந்தித்து பேசிய நிலையில் அதிமுகவுடனும் அன்புமணி பேசியதாக சொல்லப்படுகிறது இந்த நிலையில் அதிமுக சம்மதத்துடன் பாரதிய ஜனதா கட்சியில் பாமக இணையும் முடிவுகள் எடுக்கப்பட்டு விட்டன அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி 25 தொகுதிகள் ஒரு மாநிலங்கள வை உறுப்பினர் பதவியுடன் பேச்சு வார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக சொல்லப்படுகிறது
தற்பொழுது ராமதாஸ் அதரப்பில் முழுவதுமாக தோற்றுவிட்ட நிலையில் அன்புமணி தான் ஆதாரப்பூர்வமான தலைவர் என்ற முடிவை கருத்தில் கொண்டு இந்த கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து முடிந்திருக்கிறது.மருத்துவர் ராமதாசை பொருத்தவரையில் நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு அடுத்த கட்டமாக அவர் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது தெரியும் தற்போதைய சூழ்நிலையில் அவர் எந்த கட்சியுடனும் கூட்டணி சேர்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதுதான் உண்மையான தகவலாக பார்க்கப்படுகிறது
Advertisements



