Udhayanidhi Stalin: நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி பதிலடி!

Advertisements

கடந்த சில நாட்களாக அமைச்சர் உதயநிதி ஒன்று கூற நிர்மலா சீதாராமன் ஒன்று கூற இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு முற்றிக் கொண்டே செல்கிறது.

சாதனம் தொடங்கி அன்று முதல் உதயநிதி சற்று அதிகமான வார்த்தைகளை விடப் போக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. மிக்ஜம் புயல் நிதி ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசை அவங்க அப்பன் வீட்டு சொத்தையா கேட்கிறோம்..? என்று கூற இப்படியே தொடர்ந்த அவரது வார்த்தைகள் பெரும் சண்டையை மூட்டி விட்டுள்ளது.

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, அவங்க அப்பன் வீட்டு சொத்தையா கேட்குறோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பற்றிய கேள்விக்கு,

அவங்க பாஷை எப்போதும் அப்படிதான். சனாதான தர்மம் விவகாரத்தில் நான் அழிக்க வரலை, ஒழிக்க வந்துருக்கோம் என பேசினார். அவருடைய பாஷை எப்போதும் அப்படிதான்.

இப்படியெல்லாம் பேசுறவங்க அவங்க அப்பன் வீட்டு சொத்தை வைத்தா இன்னிக்கு பதவியில் அனுபவிக்கிறாரா?-ன்னு சொல்ல முடியுமா? கேட்க முடியுமா? என்றார். இந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனடியாக பதிலடி அளித்துள்ளார்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

யாரிடம் எப்படி பேச வேண்டும் என்று தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் கலைஞர்- கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்துள்ளார்கள்.

சிலரிடம் அண்ணாவைப் போல- சிலரிடம் கலைஞரைப் போல– சிலரிடம் கழகத்தலைவரைப் போல பேசுகிறோம். எனினும், குறிப்பிட்ட சிலரிடம் பெரியார் வழியில் தான் பேசியாக வேண்டியிருக்கிறது.

வெள்ள பாதிப்புக்காக கழக அரசு நிவாரண நிதி கேட்டால், “நாங்கள் என்ன ஏ.டி.எம்-ஆ” என ஒன்றிய அமைச்சர் ஒருவர் கூறியதாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, ‘அவர் அப்பா வீட்டுப் பணத்தை கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அளித்த வரிப்பணத்தை தானே கேட்கிறோம்” என்று கூறினேன்.

என் பேச்சில் மரியாதை சற்று குறைவாக இருந்ததாக அப்போது சிலர் வருத்தப்பட்டார்கள். அடுத்த நாளே, மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் அவர்களுடைய அப்பா வீட்டு பணத்தை கேட்கவில்லை என்று அவர்கள் கோரியபடியே மிகுந்த ‘மரியாதையுடன்’ கேட்டுக் கொண்டேன். ஆனாலும், மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் ‘பாஷை’ குறித்து இன்று பாடமெடுத்துள்ளார்கள்.

மீண்டும் சொல்கிறேன் மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் அவர்களின் ‘மரியாதைக்குரிய’ அப்பா வீட்டுப் பணத்தை நாம் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து தமிழ்நாடு அரசு கோரிய பேரிடர் நிவாரண நிதியைத்தான் கேட்கிறோம்.

வழக்கமாக ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் மாநில பேரிடர் நிவாரண நிதியை தந்து விட்டு, ஏதோ ஒன்றிய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தந்தது போல அடித்துப் பேச வேண்டாம்.

நாங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் ‘மரியாதை’ தருவதற்கு தயாராகவே இருக்கிறோம் – தமிழ்நாட்டு மக்கள் மீது கொஞ்சமாவது ‘அக்கறை’ வைத்து நிதியைத் தாருங்கள் மரியாதைக்குரிய மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களே என்று சரவெடி பதில் அளித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *