Udayanidhi Stalin:யாராக இருந்தாலும் பெரியாரைத் தாண்டி அரசியல் செய்ய முடியாது!

விஜய் நேற்று சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

சென்னை:தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாளையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். எளிய முறையில் மலர் மாலையைத் தானே எடுத்துக்கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை செலுத்தினார். அப்போது த.வெ.க.பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் , நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “யாராக இருந்தாலும் தமிழ்நாட்டில் பெரியாரைத் தாண்டி, பெரியாரைத் தொடாமல் அரசியல் செய்ய முடியாது. நண்பர் விஜய் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்.எனத் தெரிவித்தார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *