அக்டோபர் 6 ஆம் தேதிநடைபெற கூடிய இடைத்தேர்தல் தாராபுரம் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.அப்போது முதல்வர் ஜோசப் விஜய்யின் சினிமா சம்பளம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசிய சில கருத்துக்கள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரத்தில் அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்து பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, விஜய் ஒரு படத்திற்கு ரூ.200 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுவதை சுட்டிக்காட்டி, “70 படங்களில் நடித்திருந்தால் ரூ.14 ஆயிரம் கோடி இருக்க வேண்டுமே… மீதி பணம் எங்கே?” என கேள்வி எழுப்பினார்.
முதல்வர் விஜய் அவர்கள் 1992 வெளியான நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் சினிமாக்கு வந்தாங்க. 1992 ல 200 கோடி கொடுத்தார்களா என விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறனர். மேலும், தேர்தல் வேட்புமனுவில் விஜய் சுமார் ரூ.600 கோடி சொத்து கணக்கு காட்டியிருப்பதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, மீதமுள்ள பணம் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதனுடன், அரசியலுக்கு விஜய் வந்ததன் பின்னணி குறித்தும் பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். எனக்கு தெரிந்த வரை தன்னிடம் வெறும் ரூ. 600 கோடி இருப்பதாக தான் தேர்தல் நேரத்தில் கணக்கு காட்டியிருக்கிறார் அவர். மத்த பணம் எல்லாம் என்ன பணம், கருப்பு பணம். அந்த கருப்பு பணத்தை எல்லாம் வெள்ளையாக மாற்ற கட்சி துவங்கியிருக்கிறார் என மக்கள் பேசுகிறார்கள்.
தமிழக வெற்றிக் கழக அமைச்சர் தான் சொல்லியிருக்கிறார். வருவாய் துறை அமைச்சர் கூட கூறியிருக்கிறார். எங்கள் தலைவர் யாரென்று தெரியுமா, ரூ. 200 கோடியை விட்டுவிட்டு வந்திருக்கிறார் என்றார். அவர் அரசியலுக்கு வந்தது ஏன் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. வெளிநாட்டில் இருந்து கார் வாங்கினார்.
காருக்கு கூட வரி செலுத்தாத ஆள் தான் முதல்வர். அதிமுக எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்கியபோதே தூய ஆட்சி தீய ஆட்சியாகிவிட்டது என்றார். எடப்பாடி பழனிசாமி பேசியதை கேட்டு விஜய் ரசிகர்கள் மட்டும் அல்ல சினிமா ரசிகர்களும் அவரை கலாய்ப்பதுடன், கேள்வி கேட்கிறார்கள். நடிக்க வந்த உடனேயே விஜய்க்கு ரூ. 200 கோடி கிடைத்துவிடவில்லை.
அண்மையில் தான் கிடைத்தது. அப்படி இருக்கும்போது 70 படங்களுக்கும் ரூ. 200 கோடி கணக்கு போட்ட உங்களின் அறிவை நினைத்து பெருமையாக உள்ளது. நீங்கள் ஒரு கணிதமேதை இபிஎஸ். நீங்கள் இருக்க வேண்டிய இடம் இந்தியா இல்லை அமெரிக்கா என்று கிண்டல் செய்கிறார்கள்.
அதாவது, ஒரு படத்துக்கு ரூ.200 கோடி என்ற கணக்கை விஜய்யின் ஒட்டுமொத்த 70 படங்களுக்கும் பொருத்துவது சரியா? என்பதுதான் தற்போது எழுந்துள்ள முக்கிய கேள்வி.இதேநேரத்தில், விஜய்யின் கடைசி படமான “ஜனநாயகன்” படத்திற்காக அவர் ரூ.200 கோடி வரை சம்பளம் பெற்றதாக பல ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இந்த தொகையை படக்குழு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.இதனால் ஒரு பக்கம், “ரூ.200 கோடி சம்பளம்… ரூ.14 ஆயிரம் கோடி கணக்கு!” என எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்வி பேசுபொருளாகியுள்ளது.மறுபக்கம், “அப்படியென்றால் ஆரம்ப கால விஜய்யின் சம்பளத்தை எப்படி கணக்கிட்டீர்கள்?” என ரசிகர்கள் எதிர்கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதோடு விவகாரம் முடியவில்லை. விஜய் அரசியலுக்கு வந்தது ஏன் என்ற கேள்வியையும் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தில் எழுப்பியுள்ளார். குறிப்பாக, விஜய் அரசியலுக்கு வந்ததன் பின்னணி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார். இவை எடப்பாடி பழனிசாமியின் அரசியல் குற்றச்சாட்டுகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தாராபுரம் இடைத்தேர்தலின் அரசியல் கணக்கும் முக்கியத்துவம் பெறுகிறது. தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சத்யபாமா தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ததுடன், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.
இதன் காரணமாகவே தற்போது தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தவெக சார்பில் சத்யபாமாவே மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் பானுமதி போட்டியிடுகிறார். திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன.இதனால் தாராபுரம் தேர்தல் களத்தில் ஏற்கனவே கடும் அரசியல் போட்டி நிலவி வரும் நிலையில், விஜய்யின் சினிமா சம்பளம்… எடப்பாடியின் ரூ.14 ஆயிரம் கோடி கணக்கு… ரசிகர்களின் எதிர்கேள்வி… என புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமியின் கணக்கு…
மறுபக்கம் விஜய் ரசிகர்களின் கேள்வி…
இந்த சம்பள விவகாரம் தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது?
தேர்தல் பிரச்சாரத்தில் எழுந்த இந்த சம்பளக் கணக்கு விவகாரம், இப்போது அரசியல் மேடையைத் தாண்டி சமூக வலைதளங்களிலும் விவாதமாகியுள்ளது..



