ரஜினி ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்.. வேகம் பிடிக்கும் ரஜினியின் ‘தர்மன்’..!

பிரபல நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்மன்’ திரைப்படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகர் ரஜினிகாந்த் ‘தர்மன்’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இதில், வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், இத்திரைப்படத்தில் ராஷி கண்ணா, யோகிபாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்துள்ளார். மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *