Delhi : பள்ளி மாணவி கூட்டுப் பாலியல் பலாத்காரம் : ஓட்டுநர், நடத்துநர் கைது.!

தில்லியில் ஸ்லீப்பர் வசதிகொண்ட ஒரு பேருந்தில் 16 வயதுப் பள்ளி மாணவியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஓட்டுநரையும் நடத்துநரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் மைன்புரியைச் சேர்ந்த பதினோராம் வகுப்பு மாணவி ஆகஸ்டு நான்காம் நாள் ஸ்லீப்பர் வசதி கொண்ட பேருந்தில் தில்லிக்கு வந்துள்ளார்.

அன்றிரவு தில்லி காஷ்மீரி கேட் அருகே பேருந்தில் வைத்து ஓட்டுநர் குல்தீப்பும், நடத்துநர் சந்தீப்பும் அந்த மாணவியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இது குறித்த புகாரின் அடிப்படையில் தில்லிக் காவல்துறையினர் வழக்குப் பதிந்து பேருந்தின் ஓட்டுநரையும் நடத்துநரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். குற்றமிழைக்கப்பட்ட அந்தப் பேருந்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அந்தப் பேருந்தில் தடயவியல் துறையினர் தடயங்களைச் சேகரித்துப் புலனாய்வில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *